
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு அத்தி வரதர் நின்று கோலத்தில் காட்சியளிக்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அத்தி வரதர் இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் மக்கள் ஆர்வமுடன் அதிகாலையிலேயே ஆர்வமுடன் அத்தி வரதரை தரிசித்து விட்டு சென்றனர்.

அத்தி வரதர் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பதால், இன்றிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக நேற்று தரிசன நேரம் குறைக்கப்பட்டு பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
