குழந்தை பிறப்பு வரையில் ஒவ்வொரு மாதமும் வணங்கவேண்டிய தெய்வங்கள் என்ன…?

0

வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு.
முதல் மாதம்: கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம்.

2-வது மாதம்: இந்த மாதம் கரு சற்று மென்மை தன்மையை அடைந்திருக்கும். செவ்வாய் அதிபதி. ஸ்ரீமுருகனையும், க்ஷேத்ர பாலகர்களையும் வணங்கவேண்டும்.

3-வது மாதம்: குழந்தையின் கை, கால்கள் உருவாகியிருக்கும். குரு அதிபதி. இந்திரன், பிரம்மா மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும்.

4-வது மாதம்: குழந்தையின் எலும்பு மற்றும் நரம்பு உருவாகும் மாதம். சூரியன் அதிபதி. சிவனாரை வணங்கினால், கரு நல்ல வளர்ச்சி பெறும்.

5-வது மாதம்: குழந்தையின் தோல் மூலம் உடலமைப்பு உருவாகிக் கொண்டிருக்கும். சந்திரன் அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் ஸ்ரீதுர்கை அம்மனை வணங்கவேண்டும்.

6-வது மாதம்: குழந்தையின் அங்கம், ரோமம், நகம் உருவாகும். சனி அதிபதி. ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபைரவர் மற்றும் ஸ்ரீவிநாயகரை வழிபடவும்.

7-வது மாதம்: பிராணன் உருவாகும். புதன் அதிபதி. ஸ்ரீவிஷ்ணுவை வணங்கவேண்டும்.

8-வது மாதம்: கருவின் உடல் வளர்ச்சி பெருகும். ஸ்ரீவிநாயகரை வணங்கவேண்டும்.

9-வது மாதம்: கரு முழு வளர்ச்சி பெற்றிருக்கும். சந்திரனே அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் துர்கையை வழிபட வேண்டும்.

10-வது மாதம்: குழந்தை பிறந்துவிடுவதால் ஆத்ம பலம் பெறும். இதற்கு ஆத்மகாரகனான சூரியன் அதிபதி. சிவனாரை வழிபட வேண்டும்.- Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply