தேய்பிறை அஷ்டமியில் பிரார்த்தனை; வாழ்வை வளமாக்கும் பைரவ வழிபாடு

0

தேய்பிறை அஷ்டமியில் பைரவரைத் தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், நம் வாழ்வையே வளமாக்கித் தந்தருள்வார் பைரவர். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது உறுதி.
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு சொலவடை உண்டு. இப்போது நடக்கும் கலியுகத்தில், மனதில் பயம், மனக்குழப்பம் என்றெல்லாம் தவித்து மருகிக் கொண்டிருப்பவர்களே அதிகம். இந்த வேளையில், தேய்பிறை அஷ்டமியில்… காலபைரவரை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் என்கிறார்கள் பக்தர்கள். நாளை வியாழக்கிழமை 25ம் தேதி அஷ்டமி. .

சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

இன்னும் சில ஆலயங்களில், ராகுகாலவேளையில், தேய்பிறை அஷ்டமியின் போது பைரவருக்கு விசேஷ பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும். பைரவரை தரிசிப்பதே சிறப்பு. தேய்பிறை அஷ்டமியின் போது பைரவரை வணங்குவது இன்னும் விசேஷம். அன்றைய நாளில், ராகுகாலவேளையில் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொள்வது கூடுதல் பலம். எனவே அஷ்டமியில் பைரவரை தரிசித்து உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். பக்கத்துணையாக இருந்து காத்தருள்வார் பைரவர்.

நாளைய தினம் (25.7.19) தேய்பிறை அஷ்டமி. அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகள் தவிடுபொடியாகும் என்பது உறுதி.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply