கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

0

வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் லட்சுமி படத்திற்கு வெள்ளை நிற தாமரை மலர் சமர்ப்பித்து, இம்மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதித்து வருபவர்களுக்கு சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கும்.

கிரக தோஷம் நீக்கும் சுக்கிரன் மூல மந்திரம்
சுக்கிர பகவான்
ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம

இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் 108 முறை துதித்து வருவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் லட்சுமி படத்திற்கு வெள்ளை நிற தாமரை மலர் சமர்ப்பித்து, கற்கள் நைவேத்தியம் வைத்து, இம்மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதித்து வருபவர்களுக்கு சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கும்.

நல்ல வருமானமும், தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகுந்த லாபமும் உண்டாகும். திருமணமாகாதவர்கள் மனதிற்கினிய வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறுவார்கள். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க கூடிய யோகம் விரைவில் ஏற்படும். குடும்பத்தில் நீடித்து வந்த பொருளாதார கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply