இருளை அகற்ற வந்த அம்மனுக்கு உகந்த ஆடி மாதம். தெரிந்து கொள்வோமா?

0

? இந்த உலகத்தை காக்கும் அன்னையாக, அனைவருக்கும் அருளும் தேவியாக, விளங்கும் அம்பிகை அம்மனை வழிபாடு செய்ய ஏற்ற மாதம் ஆடி மாதம் ஆகும்.

? இரு காலங்கள்:

நமது முன்னோர்கள் ஓராண்டின் காலத்தை இரண்டாகப் பிரித்தனர்.

1) ஒளி காலம்: ஒளி காலத்தில் சூரியன் சற்று தெற்கு நோக்கி நகர்ந்து ஒளி தெரிகிறது. அதனாலேயே தை மாதம் முதல் ஆனி மாதம் வரை, இந்த காலகட்டத்தில் சுபகாரியங்கள் தொடங்குவது வழக்கம்.

2) இருள் காலம்: ஆடி மாதம் என்பது இருள் துவங்குகிற காலம் ஆகும். பின்னால் வருகிற எதிர்காலத்தில் எந்த ஒரு இன்னல்களும் நேரக் கூடாது என்பதற்காகவே ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வது வழக்கம்.

? அன்னையாக இருந்து நம்மை காத்தருள்வாள் அம்பிகை என்பது ஐதிகம். மேலும் இக்காலத்தில் கருவுற்றால் உருவாக்கும் குழந்தையானது ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதுதான் அறிவியல் உண்மை.

? சிறப்பு வழிபாடு: அம்மன் திருக்கோவில்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களும், மனிதனுடைய வாழ்க்கையை தான் சுட்டிக்காட்டுகின்றது. தெரிந்து கொள்வோமா?

மேலும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், அக்னி சட்டி எடுத்தல், தீ மிதித்தல் என பக்தர்கள் விதவிதமான நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.

முக்கியமாக கோவில்களிலும், வீடுகளிலும் கூழ் ஊற்றுதல் போன்றவையும் நடைபெறும். அவ்வாறு வழிபாடு செய்வதால் இருள் அகன்று ஒளி கிடைக்கும் என்பது ஐதீகம்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply