வாழ்வை உயர்த்தும் விநாயகர் வழிபாட்டைப் பற்றி தெரியுமா..?

0

✡ நாம் வணங்கும் தெய்வங்களின் எளிய தெய்வம் பிள்ளையார். அவரை வீட்டில் வைத்து முறையாக வழிபட்டால் நிச்சயம் வாழ்க்கை வளம் பெறும்.

✡ மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம் சர்க்கரை, வெல்லம் போன்ற விநாயகர் வடிவத்திலும் வைத்து வழிபாடு செய்யலாம். எந்த வடிவிலும் குடிகொண்டு அருள் செய்வார்.

✡ வழிபாடு முடிந்ததும் நீரில் கரைத்தாலும் நலம் அளித்து காப்பார். முதல் மூர்த்தி அருள்மிகு விநாயகப் பெருமான்.

✡ நிவேதனப் பொருட்கள்:

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல் பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.

✡ மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கும். மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால் கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

✡ கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

✡ அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply