வாழ்வில் நிகழும் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும், தீர்வு பெற வேண்டுமா? இதோ இந்த வழிபாட்டை மட்டும் செய்யுங்கள்

0

முருகப்பெருமானுக்குரிய ஆயுதமாக இருப்பது வேல். தீய சக்திகளின் அம்சமான அரக்கர்களை ஒழித்து, நன்மைகளை அருளும் அந்த வேல் முருகனின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு கோவில்களில் வணங்கப்பட்டு வருகின்றது.

அதே முறையில் வீட்டிலேயும் சிலர் வேல் வழிபாடு செய்கின்றனர். வேல் வழிபாட்டின் சிறப்புகளை பற்றி நாம் பார்ப்போம்.

? வேல் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு புகழ்பெற்ற முருகன் தளத்திற்கு அல்லது ஆறுபடை முருகன் கோயில்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று, அங்கு பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான வேல் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும்.
சிறிய வேலாயுதத்தை உங்கள் கையில் வைத்திருந்தபடி முருகப்பெருமானை வழிபட்டு, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் ஒரு புதிய சிகப்பு நிற துணியை விரித்து, அதன் மீது ஒரு வெள்ளிக் கிண்ணம் அல்லது பித்தளை கிண்ணத்தில், புதிய பச்சரிசியை நிரப்பி அந்த வேலை அதில் நட்டு வைக்க வேண்டும்.

? ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது சுபமுகூர்த்த நாளிலோ உங்கள் பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் வேலை கங்கை நீர், காய்ச்சப்படாத சுத்தமான பசும்பால், சாதாரண நீரை கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்து, சுத்தமான துணியில் துடைத்து மீண்டும் வெள்ளிக் கிண்ணத்தில் புதிய பச்சை அரிசியை நிரப்பி வேலினை வைக்க வேண்டும்.

? சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமத்தை வேலின் இரண்டு பக்கமும் பொட்டு வைத்து, சிறிதளவு விபூதியை தூவி விட வேண்டும்.

வேல் நட்டு பட்டிருக்கும் கிண்ணத்தில், முருகனுக்கு விருப்பமான பன்னீர் ரோஜாப்பூக்கள் அல்லது செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு, அவல், பொரி கடலை அல்லது பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, தீபதூபம் காட்டி முருகனுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் அல்லது கந்தசஷ்டி கவசம் படித்து வழிபட வேண்டும்.

? மேற்கூறிய பூஜையினை தொடர்ந்து 21 நாட்கள், இறை பக்தியுடன் திடகார்த்தமான செய்துவர, நமக்கு எத்தகைய பிரச்சனைகளும் தீருவதற்கான வழி பிறக்கும்.- Source: kalakkal


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply