வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இதை செய்யுங்கள் போதும்..!

0

தேங்காய் என்பது மிகவும் தூய்மையான பழமாக பார்க்கப்படுகிறது. அதனை வீட்டில் வைப்பதால் லட்சுமி தேவிக்கு நாம் அழைப்பு விடுவது போன்றதாகும்.

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை வைப்பதாலும் அவர் ஈர்க்கப்படுவார்.

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து வழிபட்டால், லட்சுமி தேவி குளிர்விக்கப்படுவார்கள். அதுவும் வெள்ளியில் செய்யப்பட சிலைகள் என்றால், வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடும்.

சங்கை பயன்படுத்துவது மங்களகரமாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை வீட்டில் வைத்தால் அது அவரை நம் வீட்டில் தங்க வைக்கும். அதிலும் கால் தடங்களை பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்கவும்.

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

சங்கில் தண்ணீர் நிரப்பி, அதனை தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவார்.

ஒற்றை கண் தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனை வீட்டில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது.- Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply