சாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு – அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா?

0

வியாழக்கிழமை என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது சாய்பாபாவும் குரு பகவானும் தான். அதில் சாய்பாபாவுக்கு விரதம் இருப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவரை முழுமையாக நம்பி வேண்டிக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் மிக எளிமையாக வாழ்ந்து, இந்து உலகுக்கு நல்லது செய்மு முக்தி பெற்று ஜீவ சமாதி அடைந்தவர் என்பதால் தான். அது ஏன் வியாழக்கிழமை என்று நீங்கள் காரணம் கேட்கலாம். ஏனென்றால் வியாழக்கிழமை தான் சாய்பாபா பிறந்தது மற்றும் ஜீவ சமாதி இரண்டுமே. அதனால் தான் அந்த வியாழக்கிழமைக்கு அவ்வளவு சிறப்பு.

இந்தியா முழுவதும் சாய்பாபா ஜீவ சமாதி அடைந்த 100 ஆண்டு நிறைவு விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆம். சாய்பாபா ஜீவ சமாதி அடைந்தது அக்டோபர் 15 ஆம் தேதி 1918 ஆம் ஆண்டு. வியாழக்கிழமை என்பதால் இன்னுதான் பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படுகிறது. ஆம். சாய்பாபாவின் அருள் நிறைந்த சாய் சமாதி சதாப்த்தி திவசம். இப்படி ஒரு நாளில் சாய்பாபாவை எல்லோரும் தலையிலும் இதயத்திலும் வைத்துக் கொண்டாடுவதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதோ அந்த அற்புதங்கள் நிறைந்த கதை உங்களுக்காக…

கோதாவரி நதியின் கரையில் அமைந்திருக்கும் புனித இடம் தான் ஷீரடி. இது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. இந்த சிறிய கிராமத்தில் தான் சாய்பாபாவின் ஊர். இந்த ஊரில் மிகப் பழமையான மசூதி ஒன்று இருக்கிறது. இந்த மதியின் பின்புறம் ஒரு அழகிய நிழல் தரும் வேப்பமரமும் இருந்தது. அந்த வேப்ப மரத்தின் அடியில் ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்து தியானம் செ்யது கொண்டிருந்தான்.

அந்த வழியே செல்லும் ஊர் மக்கள் முகத்தில் நல்ல ஒரு தெய்வீக ஒளிவட்டம் தெரிவதை அந்த ஊர் தலைவரின் மனைவி பாஜ்யாபாய் அறிந்து கொண்டார். தவம் புரிந்து கொண்டிருந்த அந்த சிறுவனை தன்னுடன் தன்னுடைய வீட்டுக்கு வந்துவிடும்படியும் நான் தாயாக உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்றும் அழைத்தார். ஆனால் அந்த சிறுவனோ அவருடன் வீட்டுக்கு வர மறுத்து மீண்டும் அந்த மரத்தின் அடியிலேயே தியானம் செய்வதில் தான் அதிக ஆர்வம் கொண்டான்.

இந்த சிறுவன் தன்னுடன் வீட்டுக்கு வர மறுத்தாலும் கூட, அவன்மீது கொண்ட அதீத பாசத்தால், தினமும் அவன் இருக்கும் இடத்துக்கு தினமும் உணவு கொண்டு வந்து கொடுப்பேன், அதை நீ மறக்காமல் வாங்கி சாப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். அந்த சிறவனும் சரி நீங்க்ள தரும் உணவை சா்பபிடுகிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். அந்த தாயும் திமும் தன் மகனுக்காக சமைப்பதாக எண்ணி, தினமும் உணவு கொண்டுபோய் கொடுத்தார். அந்த சிறுவனும் அதை அன்போடு சாப்பிட்டு வந்தான். அதனால் இருவருக்கும் இடையே தாய் – மகன் பாசம் அதிகமாகிக் கொண்டே போனது.

சிறுவன் தியானம் செய்யும் மரத்துக்கு அருகில் கந்தோபா என்னும் சிறிய கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலின் பூசாரி, இந்த சிறுவனின் முகத்தில் தெரிந்த தெய்வீக ஒளியின் காரணமாக சாய் என்று பெயர் கொண்டு அழைக்கத் தொடங்கினார். அதன் காரணமாகவே சாய் என பெயர் வந்தது.

தன்னுடைய தவத்தை இந்த இடத்தில் முடித்துவிட்டு, சில காலத்திற்குப் பின் அந்த சிறுவன் அந்த ஊரைவிட்டு வெளியேறிப் போய்விட்டான். போகும் வழிகளில் இருக்கின்ற கோவில்களில் எல்லாம் வழிபட்டுக் கொண்டே சென்ற போது, சாந்து பட்டேல் என்னும் ஒரு வியாபாரியை சந்தித்துப் பழக் நேர்ந்தது. இந்த சிறு வயதில் இவனிடம் இருக்கும் தெய்வீகத் தன்மையை அறிந்து கொண்ட வியாபாரி, சீரடியில் நடக்கவிருக்கும் தன்னுடைய மகளின் திருமணத்துக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்தார். அந்த சிறுவனும் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டு, அந்த வியாபாரியின் குடும்பத்தாருடன் சீரடிக்கு மீண்டும் சென்றான்.

இதற்கு இடையே அந்த சிறுவனுக்கு பதினாறு வயதாகியிருந்தது. சீரடிக்குப் போன அந்த சிறுவன் தான் முன்பு அமர்ந்து தவம் புரிந்த அதே மரத்தடியைத் தேடிச் சென்று அதன் கீழ் அமர்ந்தான். கந்தோபா கோவில் பூசாரியும் இது சாய் தான் என்பதை உணர்ந்து கொண்டார். ஊர் மக்கள் ஏன் இந்த வேப்பமரத்தடியை தவிர வேறு எங்கும் அமர மறுக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்னார் இந்த மரம் தான் என்னுடைய குரு என்னும் அந்த மரத்தின் அடியில் ஒரு சிறிய இடத்தைச் சுட்டிக் கொட்டி இங்த இடத்தைத் தோண்டிப் பாருங்கள் என்றும் சொன்னார்.

சிறுவன் காட்டிய இடத்தை மக்கள் தோண்டினர். சிறிதாகக் கொஞ்சம் தோண்டியதும் அங்கு ஒரு சிறிய அறையில் ஒரு அழகான விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதை பார்த்த மக்கள் ஆச்சர்யப்பட்டனர். அதன்பின்பு தான் அவர் தொடர்ந்து பல அற்புதங்களைச் செய்யத் தொடங்கினார். அந்த சிறுவன் கோவில் பூசாரி அழைத்த சாய் என்பதுடன் பொதுமக்கள் பாபா என்பதையும் சேர்க்க சாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply