பிப்ரவரி மாத பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை

0

மேஷம்

கிரக நிலை:
சுகஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
சுபப் பலன்களை எதிர்நோக்கி காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

அஸ்வினி:
இந்த மாதம் உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

பரணி:
இந்த மாதம் எதிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சாதகமின்றியே இருப்பார்கள். மனைவி வழியில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும்.

கார்த்திகை 1- ம் பாதம்:
இந்த மாதம் பொருளாதாரநிலையில் சங்கடங்களையே சந்திப்பீர்கள். சிலருக்குக் கேட்டஇடத்தில் கடன் தொகை கிடைப்பதில்கூட தடைகள் ஏற்படும். குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவுகளும் ஏற்படும். உற்றார்-உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

ரிஷபம்

கிரக நிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உறவினர் மூலம் உதவிகளை எதிர்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.

தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும் பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.

அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் அசையா சொத்துவகையில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமற்ற நிலைகளால் அபிவிருத்திக் குறையும். கூட்டாளிகளும் ஒற்றுமையின்றி செயல்படுவார்கள்.

ரோகிணி:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அரசியல்வாதிகள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே பதவியினைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெற்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தைப் பெறஇயலும் என்றாலும் போட்டி பொறாமைகளையும் சந்தித்தே ஆகவேண்டும்.

பரிகாரம்: வெள்ளி அன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

மிதுனம்

கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் எல்லாப் பணிகளிலும் புதுத்தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களும் அதன்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் உங்களின் உடல் ஆரோக்கியம் வெகுசிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த உடல்நலக் கோளாறுகள் யாவும் படிப்படியாக விலகும். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக அமைவதால் மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

கடகம்

கிரக நிலை:
ராசியில் ராஹூ – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
லாபத்தை அதிகரிக்க பாடுபடும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

புனர்பூசம் 4 – ம் பாதம்:
இந்த மாதம் குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதாரநிலையும் மிகச்சிறப்பாக அமைவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

பூசம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியான நிலையினை அடைவார்கள். தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

ஆயில்யம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், அபிவிருத்தியும் பெருகும். தொழிலாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் பல முன்னேற்றப்பாதைகளுக்கு வழிவகுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

சிம்மம்

கிரக நிலை:
சுகஸ்தானத்தில் குரு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
வெளியூர் பயணத்தில் ஆர்வமுடன் இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் பல நல்ல பலன்களை பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும்.

அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

மகம்:
இந்த மாதம் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நட்பு மலரும்.

பூரம்:
இந்த மாதம் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை ஏற்பட்டு தாராளமான பணவரவுகள் உண்டாகும். உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள் விலகி சாதகப்பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருக்கும்.

உத்திரம் 1 ம்- பாதம்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் அபிவிருத்தி அடையும். கேட்ட இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலனை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28

கன்னி

கிரக நிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – சுகஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
கணிவுடைய பேச்சால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளின் ஒற்று மையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வேலையாட்களாலும் பணவரவுகளும் ஆர்டர்களும் குவியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளும் எதிர் பாராத ஏற்றத்தை ஏற்படுத்தும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் புதிய கிளைகளை நிறுவும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகம் நல்லபடியாக இருக்கும். சிலருக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பர். எளிதில் கோபப்படக்கூடிய நபர்கள் யாரிடமும் கவனமாக பேசுவது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.

பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

துலாம்

கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – சுகஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
பிள்ளைகள் மேல் அதிக நேசம் வைத்திருக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் படிப்பிற்கேற்ப சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பெண்கள் மனதுக்கு சந்தோசப் படக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஸ்வாதி:
இந்த மாதம் உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

விருச்சிகம்

கிரக நிலை:
ராசியில் குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
எச்சரிக்கையாக எந்த காரியத்தையும் செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகமான பலன் வரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

விசாகம் 4- ம் பாதம்:
இந்த மாதம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உயர் பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

அனுஷம்:
இந்த மாதம் புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும்.

கேட்டை:
இந்த மாதம் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

தனுசு

கிரக நிலை:
ராசியில் சந்திரன், சுக்ரன், சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது – சுகஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
தன்னிச்சையாக செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாக கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

மூலம்:
இந்த மாதம் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எந்தக் காரியத்திலும் எளிதாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

பூராடம்:
இந்த மாதம் சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். கடன்கள் அனைத்தும் குறையும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்.

உத்திராடம் 1 -பாதம்:
இந்த மாதம் கொடுக்கல்-வாங்கலிலும் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப்பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும்.

பரிகாரம்: நவக்கிரஹ குருவை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

மகரம்

கிரக நிலை:
ராசியில் சூர்யன், புதன், கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
வழக்கத்தைவிட அதிக மாக உழைக்க தயாராகும்மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.

திருவோணம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றிக் கிடைப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தி பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறக்கூடிய கால கட்டம்.

பரிகாரம்: வினாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்;
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

கும்பம்

கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
குறும்புத்தனம் அதிகம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே,இந்த மாதம் அனைத்து கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் சிலருக்கு மனதில் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிக்கனியினைப் பறிப்பார்கள்.

ஸதயம்:
இந்த மாதம் தொழில், வியாபார ரீதியாக இருந்து வந்த கடந்த கால பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தையும் ஏற்றத்தையும் பெறுவீர்கள். பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருப்பதால் வீணான பழிச்சொல் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவி பொருளாதாரத் தடைகள் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சில நேரத்தில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபம் குறையும். வரவேண்டிய ஆர்டர்களும் தடைப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17

மீனம்

கிரக நிலை:
ராசியில் செவ்வாய் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உழைப்புக்கு அஞ்சாத மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது.

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பூரட்டாதி 4 – ம் பாதம்:
இந்த மாதம் எந்தவொரு காரியத்தையும் முழுமையாகச் செய்துமுடிக்க இயலாதபடி தாமதநிலை உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். பலவகையில் நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் வீணான சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாத நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களே தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். கடன்காரர்களும் மிகவும் தொல்லை கொடுப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து உடல்நிலை சோர்வடையும்.

ரேவதி:
இந்த மாதம் நன்மை, தீமை கலந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். உற்றார்- உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வதால் கடன்களைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19 – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply