மும்மூர்த்திகளின் வடிவமான முருகப்பெருமானின் இந்த சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா..?

0

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் வடிவமாக இருக்கிறார். மு-என்ற எழுத்து ‘முகுந்தன்’ என்ற விஷ்ணுவையும், ரு-என்ற எழுத்து ‘ருத்திரன்’ என்ற சிவனையும், க-என்ற எழுத்து ‘கமலம்’ என்னும் தாமரையில் உதித்த பிரம்மனையும் குறிப்பதாகும்.

எனவே முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் வடிவாக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்பவராகவும் இருக்கிறார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்தில் மாசி, ஆவணி மாத திருவிழாவின் போது மாலையில் முருகப்பெருமான் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமான் அம்சமாகவும், மறுநாள் காலையில் வெண்ணிற ஆடை உடுத்தி பிரம்மதேவன் அம்சத்திலும், மதியவேளையில் பச்சைப் பட்டு சாத்தி பெருமாள் அம்சத்திலும் பக்தர்களுக்கு அருள்வார்.- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply