
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எந்த காரியங்களிலும் நேர்மையும் உண்மையும் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பெண்களுக்கு எதிர்பாராத திருப்பம் ஏற்படும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்: சிவனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.
செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உத்தியோகம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.
பெண்கள் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சொல்லிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் சுபமாக எதுவும் நடந்து முடியும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் மூலம் ஏற்பட்ட டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும்.
பெண்களுக்கு வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கருமமே கண்ணாக இருக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த வாரம் கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது. மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர் பயணங்கள் உண்டாகும், நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள். மனத் தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்:கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு
பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை செய்யக் கூடிய திறமை உடைய ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெள்ளை
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.
குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அனைவருடன் நல்லமுறையில் பழகக்கூடிய ஏழாம் எண் அன்பர்களே இந்த வாரம் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.
பெண்களுக்கு பணவரத்து தாமதப்படும். அரசியல் துறையினருக்கு எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெறும் எட்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும்.
பெண்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளை, பச்சை
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த வாரம் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.
