காலிமுகத்திடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிப்பு.

0

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு அங்கிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன. அத்துடன், அங்கிருந்து செல்லாமல் போராட்டக்களப் பகுதியில் தங்கியிருந்த மக்களும் அகற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் வந்திருந்ததாகவும் தெரியவருகிறது. அதேவேளை போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்த நிலையில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து செறிருந்தனர்.

எனினும் சில போராட்டகாரர்கள் காலிமுகத்திடல் பகுதியில் தங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply