கொவிட்-19 தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களில், எழுமாறாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகமாகவுள்ளது.
எனவே அவ்வாறு அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

தற்போது பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலை செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகிறது.
எனவே தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
காரணம் தற்போது கொவிட் தொற்று மிக வேகமாகவும், இலகுவாகவும் பரவக் கூடிய சூழலே காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.