போராட்டங்களுக்கு செவிசாய்க்க நாங்கள் தயார்.

0

ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனநாயக அரசு என்ற வகையில், பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க நாங்கள் தயாராக உள்ளோம். ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க நாங்கள் தயாராக உள்ளோம்.

அரசு என்ற வகையில், அகிம்சை வழியில் செயல்படும் மக்களின் அகிம்சை குரல்களுக்கு செவிசாய்க்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். ஆனால், பயங்கரவாதத்தை ஏற்க முடியாது.

Leave a Reply