ரயில் சேவைகள் முடங்கும் வாய்ப்பு.

0

இலங்கையில் பிரதான ரயில் நிலையங்கள் பலவற்றில் ரயில் ரிக்கெட் முடிவடைந்துள்ளதால் ரயில் சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்களுக்கு தேவையான ரிக்கெட்டுகளை , அரசஅச்சகம் அடிச்சிட்டு வந்துள்ளது.

இந்நிலையில் , தற்போது அதன் சேவைகளை நிறுத்தி அச்சிடும் உபகரணங்கள் ரயில்வே திணைக்கள தலைமையகத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அச்சிடும் நடவடிக்கைகளுக்காக போதுமான பயிற்சி பெற்ற ஊழியர்களை சேர்த்துக் கொள்ள முடியாமல் போயுள்ளதால் அச்சிடும் நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply