தற்போது தியேட்டர்களில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று கொண்டிருக்கிறது இரவின் நிழல் படம். அதற்கு பல விதங்களில் நடிகர் பார்த்திபன் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.
தற்போது பார்த்திபன் நடிகை பிரிகிடா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரிகிடா தியேட்டரில் மீடியாவிடம் பேசும்போது ‘சேரிக்கு போனால் அந்த மாதிரி (கெட்ட) வார்த்தைகளை தான் கேட்க முடியும், அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற எல்லாம் முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கே எப்படி பேசுவார்கள் என்று” என பிரிகிடா கூறினார்.
சேரி மக்கள் பற்றி நடிகை இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்தது. இதற்கு தற்போது பிரிகிடா மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
“இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்..” என குறிப்பிட்டு பிரிகிடா மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
பார்த்திபனும் அவரது ட்விட்டை பகிர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.



