போதும் போதும் என்றாலும் பொன்மழை உங்கள் வீட்டில் பொழிந்து கொண்டே இருக்க ஒரே 1 செம்பருத்திப்பூ போதும்.

0

பொதுவாகவே செம்பருத்தி பூவுக்கு நல்ல விஷயங்களை வசியம் செய்யக்கூடிய தன்மை அதிகமாக உள்ளது.

குறிப்பாக செம்பருத்தி பூவுக்கு உள்ளே இருக்கும் மகரந்தத்திற்க்கு அந்த சக்தி அதிகமுண்டு.

செம்பருத்தி பூவுக்கு நடுவே காம்பு போல ஒன்று எட்டிப்பார்க்கும் அல்லவா.

அந்த காம்பை லேசாக கையில் உரசி எடுத்தால், மகரந்தம் உங்களுக்கு கிடைத்து விடும். அந்த மகரந்தத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மகரந்த துகள்களை ஒரு சிறிய டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் டப்பாவாக இருந்தால் கூட பரவாயில்லை.

செம்பருத்தி பூ மகரந்த துகள்களுடன், சிறிதளவு அரகஜா, சிறிதளவு ஏலக்காய் பொடி, போட்டு நன்றாக கலந்து இதை ஒரு மைபோல தயார் செய்து கொள்ளவேண்டும்.

அதாவது நெற்றியில் இட்டுக் கொள்வதற்கு வசதியாக தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை கலப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

நெய் ஊற்றி குழைத்து இதை மை போல தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு, மனதார குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் சுக்கிர பகவானையும் நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்தப் பிரார்த்தனையை மனதார செய்யுங்கள்.

அதன் பின்பு தினம்தோறும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வர உங்களுக்கு பண வசியம் ஏற்படும்.

இது கருப்பு நிறத்தில் தான் இருக்கும். நெற்றியில் வைத்தால் இது என்ன திலகம் என்று கேட்பார்கள் என்றால், இதை உச்சந்தலையில் வைத்துக்கொள்ளலாம் தவறு கிடையாது.

அப்படி இல்லை என்றால் இந்த மையை நெற்றியில் வைத்து விட்டு அதன் மேலே குங்குமமிட்டு கொண்டாலும் தவறு கிடையாது.

இந்த திலகத்தை மட்டும் நெற்றியில் இட்டு வந்தால் உங்களை விட்டு துரதிஷ்டம் தூரம் சென்று விடும்.

அதிர்ஷ்டம் பக்கத்தில் வந்துவிடும். கடன் தொல்லை தீரும். பணக்கஷ்டம் தீரும்‌. வீட்டில் மன நிம்மதி இருக்கும்.

உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை நல்லதும் ஒவ்வொன்றாக உங்களுக்கு நடக்கத் தொடங்கும்.

நீங்கள் வேண்டுமென்றால் 48 நாட்கள் இந்த திலகத்தை வைத்து தான் பாருங்களேன். வாழ்வில் வரக்கூடிய நல்ல மாற்றங்களை.

நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் உண்டு என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply