
அப்படி எதிர்மறை எண்ணங்கள், ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் சண்டை, சச்சரவு என எல்லோரும் சோகமாகவே காணப்படுவார்கள். வாழ்வின் நிம்மதியே நமை விட்டு போய்விடும்.
வீட்டில் எதிர்மறையான சக்திகள் இருந்தால் தொடர்ந்து கெடுதல் நடக்கும், துன்பம் நேரும் என்று நம்பப்படுவது உண்டு. நாம் எந்த செயலை கையில் எடுத்தாலும் தோல்வியில் முடியும். அப்படி வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறியும் எளிய வழிமுறை இதோ உங்களுக்காக!
வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா, இல்லையா என கண்டறிய பல வழிகள் சொல்லப்படுகின்றன. ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா என கண்டறியமுடியும்.

நாம் எங்கு இருந்தாலும் நம்மைச்சுற்றி ஆற்றல்கள் இருக்கும். அதுவும் வீடு எனும் போது அனைவரும் சேர்ந்து வாழும் இடம். நம் உணர்வுகளுக்கு குறிப்பிட்ட ஆற்றல்களை ஈர்க்கும் திறனும், வெளியேற்றும் திறனும் உண்டு.
நம் உறவுகள் எதிர்மறை சிந்தனையுடன் வீட்டிற்குள் வரும் போது எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வர வாய்ப்பு உண்டு. அவை நம் வாழ்வை கெடுத்துவிடும் வல்லமை படைத்தவை.

அப்படி எதிர்மறை எண்ணங்கள், ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் சண்டை, சச்சரவு என எல்லோரும் சோகமாகவே காணப்படுவார்கள். வாழ்வின் நிம்மதியே நமை விட்டு போய்விடும்.
கெட்ட சக்தியை அறிய கண்ணாடி டம்ளர் மற்றும் கல் உப்பை எடுத்துக்கொள்ளவும்.
கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பை போட்டு தண்ணீர் ஊற்றி நிரப்பி எதிர்மறை ஆற்றல் எங்கு உள்ளது என சந்தேகமாக உள்ளதோ அங்கு வைத்துவிட வேண்டும்.

டம்ளரை 24 மணி நேரம் கழித்து பார்க்க வேண்டும். அதற்கு முன்னர் டம்ளரை நகர்த்த கூடாது.
24 மணி நேரம் கழித்து பார்க்கும் போது டம்ளர் வைத்த இடத்திலேயே, வைத்த மாதிரியே இருந்தால் அங்கு கெட்ட சக்தி இல்லை என்று பொருள்.

டம்ளர் நகர்ந்து அல்லது வைத்தது போல் இல்லாமல் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அங்கு எதிர்மறை சக்தி இருக்கிறதென்று அர்த்தம். – Source: tamil.samayam
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
