இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

0

நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இடம்பெற்று வரும் அமைதியின்மை காரணமாக, எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை தாம் உடனடியாக நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply