திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் பெரும் பதற்றம்.

0

திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அத்துடன் வி.வி.ஐ.பிகளுடன் இன்று கொழும்பில் இருந்து சில ஹெலிகாப்டர்கள் சென்றதாகவும் அதில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் காணொளிகள் வெளியாகின.

இவ்வாறு சென்றவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கிருக்கும் ராஜபக்ஷர்களை வெளியே அனுப்புமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply