எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் உடனிருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி எப்போதும் ஆதரவை வழங்குமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



