இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போராட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.
அத்துடன் நேற்று (09-05-2022) பிற்பகல் முதல் அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டு பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச தரப்பு முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதன்பிரகாரம் தற்போது கொழும்பு ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



