மட்டக்களப்பு, ஊறணி சந்தி பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையாரடி வரையும் ஊர்வலமாக சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவார்கள் என்ற அச்சத்தையடுத்து, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



