யாழ் மாவட்டத்தில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம் பெற்றது.
அத்துடன் குறித்த போராட்டம் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று முற்பகல் 9 மணி அளவில் முன்னெடுக்கப்பட்டது.
” அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து, அக்கிரமத்தில் ஆட்சி செய்கின்ற அரசே, மக்கள் அபிப்பிராயத்திற்கு தலைவணங்கு ” என கோஷம் எழுப்பி வைத்தியர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் என சகலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.



