தமிழகத்தின் கேரளா பகுதியில் புதிய நோய்தொற்றுப் பரவலான தக்காளி காய்ச்சல் குழந்தைகள் மத்தியில் பரவலடைந்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த காய்ச்சலுக்கு 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த காய்ச்சல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.
அதிக பாதிப்பு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



