நீர்கொழும்பு வீதியில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எரிவாயு கோரி மக்களாள் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணத்தால் மாபாகே சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது நாட்டில் கடுமையான டொலர் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
இதன் பிரகாரம் எரிசக்தி நெருக்கடியும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்துக்கு எதிரான இரண்டாவது ஹர்த்தால் போராட்டம் 69 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



