ஒரு குழந்தை சிறு வயதில் இருந்தே எப்படி வளருகிறதோ அது போல தான் அதன் வாழ்க்கையும் அமைகிறது.
ஒரு குழந்தைக்கு நல்ல ஆசிரியரும், கல்வியும் கிடைத்துவிட்டால் போதும்.
அந்த குழந்தை நன்றாக படித்து அடுத்தகட்ட நிலைக்கு சென்று விடும்.
அவ்வாறு படித்து முடித்த குழந்தைகளுக்கு நல்ல அலுவலகமும், அங்கு தனது மேலாளர் குணம் சிறந்தவராகவும் இருந்தால் போதும். அவர்கள் வாழ்க்கை நிச்சயம் மாறிவிடும்.
எப்படி ஒரு கொடி தழைத்து, சிறந்து வளர்வதற்கு ஒரு பிடிமானம் தேவை படுகிறதோ அதுபோல முடியாதவர்கள் வாழ்க்கையை மேல் நோக்கி கொண்டு செல்ல ஒருவர் உந்துகோலாக இருக்க வேண்டும்.
இப்படி பலரின் வாழ்க்கையை மாற்றியவர்கள் என்று பலர் இருக்கிறார்கள்.
இருள் படர்ந்த இடத்தை எப்படி விளக்கின் ஒளி வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறதோ அதுபோல மற்றவர் செய்யும் நன்மை ஒரு சிலரின் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
இவ்வாறு நம்மை சுற்றியும் நமக்கான பிடிமானம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அதனை கண்டுபிடித்து அதன் வழியில் நடக்க வேண்டியது நமது கடமையாகும்.
இவ்வாறு நமது கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் நமது பிடிமானத்தை கண்டுபிடித்து கொடுப்பதற்காகவே இந்த விளக்கின் ஒளி நமக்கு பயன்படுகிறது.
அதற்காக வாசனை மிகுந்த சந்தனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய பண்ணீரையும் சேர்த்து இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு எப்பொழுதும் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் இதில் போட்டு ஒரு நாள் முழுவதும் பூஜை அறையில் வைத்து ஊற வைக்க வேண்டும்.
இந்த திரியை வெளியே எடுத்து ஈரம் இல்லாமல் இருக்குமாறு காயவைத்து எடுத்துவைக்க வேண்டும்.
பின்னர் எப்போதும் உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த திரியை பயன்படுத்தி தீபமேற்ற வேண்டும்.
இந்த திரியின் மகிமையால் உங்களின் வாழ்க்கை நிலை விரைவாக மாற்றத்திற்கு வந்துவிடும்.
உங்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் நீங்கள் விரைவாக தேடி பிடிப்பீர்கள்.
நிச்சயம் இதன் மூலம் உண்டாகும் மாற்றத்தை உங்களால் விரைவில் உணர முடியும்.
