நாடுபூராகவும் இன்று ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ள நிலையில், மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி கணப்படுகின்றன.
அத்துடன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் மக்களின் ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்குவதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதன்பிரகாரம் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பஸ்கள் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



