இலங்கையில் இன்றைய தினம் வங்கிச்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (06-05-2022) நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்திடமிருந்து (CBEU)அறிவித்தலைப் பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கையின் இரு பிரதான வங்கிகள் தகவலை வெளியிட்டுள்ளன.
இதன் பிரகாரம் எமது (Commercial bank)வங்கி சேவைகளில் இடையூறுகள் ஏற்படலாம் எனவும் எமது வங்கி கிளைகள், அத்தியாவசிய மற்றும் அவசர வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக மு.ப் 9.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2022-ம் ஆண்டு மே 06-ம் திகதி வெள்ளிக்கிழமை அவசர மற்றும் அத்தியாவசிய வங்கி சேவைகளை வழங்குவதற்காக திறக்கப்பட்டிருக்கும் கிளைகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வதற்கு WWW.Combank.lk என்ற வலைதளத்தை பார்வையிடவும் என குறித்த வங்கி தெரிவித்துள்ளது.



