பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

0

நாட்டில் அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பாடசாலை அடிப்படையிலான போஷாக்கு நடவடிக்கைகள் கூட ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ விமலரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தகங்கள், காலணிகள், சீருடைகளின் விலைகள் 200% உயர்ந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் காலையில் பாடசாலைக் கூட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர்கள் காலை உணவை உட்கொள்ளாதது தெரியவந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply