அரச தலைவரின் முடிவில் இடம்பெற்ற திடீர் மாற்றம்.

0

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அரச தலைவருடன் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ள அரசதலைவருடனான கலந்துரையாடல் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முன்னதாக சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் அரசாங்கத்துடன் இணைந்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்களிப்புடன் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.அரச தலைவரின் முடிவில் இடம்பெற்ற திடீர் மாற்றம்.

Leave a Reply