கொழும்புக்குள் நுழைந்த போராட்டக் குழு.

0

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி தற்போது காலிமுகத்திடலை அடைந்துள்ளது.

இந்த நிலையில் காலிமுகத்திடல் வீதியூடான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிமுகத்திடலில் போராட்டம் இன்று 20ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டமும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வந்த ஆர்ப்பாட்டமானது பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பேரணியானது தற்போது காலிமுகத்திடல் நோக்கி நகர்வதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரை தேடியறியும் குழு, நவ சம சமாஜ கட்சி, சமசமாஜ ஒற்றுமை குழு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் என்பன இணைந்துள்ளன.

மேலும், இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ள இளைஞர் யுவதிகள் பல்வேறு வாத்தியக்கருவிகளை இசைத்த வண்ணம், அதிரவைக்கும் பாடல் பாடியபடி காலிமுகத்திடலை நோக்கி வித்தியாசமான முறையில் தமது ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply