இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்..!!!

0

தெற்கு அரசியலில் அடுத்த 48 மணிநேரத்துக்குள் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என்று இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த டலஸ் அழகப்பெரும, பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவிட்டார்.

அத்துடன் , மற்றுமொரு ஆளுங்கட்சி உறுப்பினரான சரித ஹேரத்தும், டலஸின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.

மேலும் எதிரணி உறுப்பினர்களை வளைத்துபோடும் அரசின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் முடிவை அறிவிக்கக்கூடும், அவ்வாறு இல்லாவிட்டால் மேலும் சிலர் அரசியிலிருந்து வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply