நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் எண்ணெய் விலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விடயம் குறித்து நிதி அமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரதனசேகர தெரிவித்தார்.
மேலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்தமையினால் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்துவதில் பிரதான சவாலாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



