தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினால் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புகழிடம் கோரி சிலர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேலும் 18 பேர் இவ்வாறு தமிழகம் சென்று உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னர் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், தனி நபர் ஒருவரும் தமிழகம் சென்றுள்ளனர்.
மேலும் ஏற்கெனவே 42 பேர் இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்றிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



