இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தங்களுக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விபரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துதுள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் மோசடிகள் ஈடுபடவில்லை என்றால் ஏன் சொத்து விபரங்களை வெளியிட நாம் அஞ்ச வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.
ஒரே குடும்பம் தீர்மானங்களை எடுக்கும் நடைமுறையை தவிர்க்கும் வகையில் அமைச்சரவை நிறுவப்பட வேண்டும்.
அவ்வரும் நாடாளுமன்றில் பதவி வகிப்பதற்கும் வயதெல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் பரிந்துரை செய்துள்ளார்.



