நாட்டில் தற்போது பாரிய நெருக்கடி நிலவி வருகின்றது.
இதன்பிரகாரம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது, நாட்டில் இன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அதனைத் தீர்ப்பதற்கு எல்லோரும் கட்சி பேதமின்றி செயற்படவேண்டியது அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாம் தோற்றுவிடுவோம் என்றால் அது நாடாளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் தொடர்பில் உடனடியாக நாம் ஆராய வேண்டி உள்ளதாகவும், இல்லையேல் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.



