புகையிரத கடவைகளை பயன்படுத்தும் மக்கள்
மிகுந்த அவதானத்துடன் பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் வாகன சாரதிகளையும் பாதசாரிகளையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மின்வெட்டு நேரங்களில் புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானம் தேவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மின்வெட்டு நேரங்களில் புகையிரத கடவைகளில் சமிக்ஞைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் வெட்டு நேரங்களில் சமிக்ஞைகளுக்கு மின் கலங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடிவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
.



