இலங்கையில் சுழற்சி முறையில் மின்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படு வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் இலங்கையில் சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் மின்னுற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், வரட்சியான காலநிலை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நாளை முதல் 15 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்தும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலைமையில், வரட்சியான காலநிலை தொடர்வதால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மின்சார சபை மின்விநியோக தடையை அமுல்படுத்த தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டே மின்விநியோக தடை அமுலுக்கு அனுமதி வழங்கியுள்ளோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.



