உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலையில் பண்ணைகளில் விற்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இவ்வாறான மாத்தளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டால், அவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என, நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகைக் காலங்களில் இவ்வாறு உயிரிழக்கும் கோழிகளை வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பாமல், நுகர்வோரின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.



