வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கிருந்து இருந்து இலங்கைக்கு டொலர்களை அனுப்புவது சுமார் மூன்று மடங்காக குறைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆயிரத்து 255 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பி இருந்தனர்.
இருப்பினும் இந்த வருடம் அந்த தொகையானது 464.1 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.
கடந்த காலங்களில் அந்நிய செலாவணி சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்தி வைத்திருந்ததன் காரணமாக இலங்கைக்கு டொலர்கள் வருவது வீழ்ச்சியடைந்தது.
இதன் பிரகாரம் இலங்கைக்கு 5 ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கிடைக்காமல் போயுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.



