எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த போது மாரடைப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 85 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



