தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிப்பதற்கும் முன்னெடுக்கப்படுள்ள விசேட வேலைத்திட்டம்.

0

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முதலில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்பிறகு அவர்களுடன் சேர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்த நிலையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடவும் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை தோறும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட போடாமல் உள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அவர்கள் அலட்சியம் காரணமாக இன்னும் தடுப்பூசி போடவில்லை.

மேலும் மீதமுள்ளவர்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாத 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை ஈடுபட்டுள்ளது.

Leave a Reply