நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்த3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்கி விநியோகிக்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் சுமார் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளையும், நாளை மறுதினமும் மேலும் 7,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.



