இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகையினை தாங்கிய கப்பல் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் 35,000 மெற்றிக்டன், அளவிலான டீசல் அந்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதனை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு முன்னெடடுக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுவனத்தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் எம். ஆர் டபிள்யு டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் தொகையினை உடனடியாக தொடர்ந்து ஊடாக ஏனைய மாகாணங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள் உள்ள வரிசைகளில் வீழ்ச்சி ஏற்படும் என வலு சக்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



