இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பினை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply