பாரியளவில் அதிகரிக்கும் பால்மா விலை.

0

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பைக்கட்டின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கடந்த 7ஆம் திகதி வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் ஒரு கிலோ பால் மாவின் விலை 600 ரூபாவினாலும் 400 கிராம் பொதியின் விலை 260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்களில் இருந்து 5.30 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 202 ரூபாவில் இருந்து 280 ரூபாவாகவும் அதிகரித்தமையே இறக்குமதி செய்யப்பட்ட பால் மா விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply