நாளை முதல் மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எரிபொருள் நிலையம்.

0

தற்போது நாட்டில் மசகு எண்ணெய் இன்மையால், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் , நாளை இரவு முதல் மீண்டும் மூடப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்னரும் போதுமான அளவு மசகு எண்ணெய் கிடைக்காமையால் இரண்டு சந்தர்ப்பங்களில் , சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.

மேலும் இன்றைய தினம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோக பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply