அம்புலன்ஸ் சேவை பாதிப்பு.

0

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாத நிலையில் சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக அரசமருத்துவ உத்தியோகத்தர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலார தெரிவித்துள்ளார்.

அத்துடன் அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாத நிலை காணப்படுகின்றதாக கூறிய அவர், சுகாதார பணியாளர்களும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றதாகவும் அவர் கூறினார்.

கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிற்கு மாற்றும் நடவடிக்கை அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

Leave a Reply